admin – BOSS TV https://theboss.in Private Cable TV ,Live TV, Boss Tv Sat, 18 Jan 2020 12:33:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=4.5.22 இன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்! https://theboss.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-23072019-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/ Tue, 23 Jul 2019 02:14:40 +0000 http://theboss.in/?p=23114 மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள் குடும்பத்தில் அமைதி தவழும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வேலையின் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவிடும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகவல்கள் வந்து சேரும் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று தங்கள் முயற்சிகளை துவக்கலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரையும் நம்பிக்கையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அமைதி தவழும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேம்படும் சொந்தத் தொழில் செய்பவர்கள் . முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் உண்டாகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவ துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாள் இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்குவதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த வார ராசி பலன்கள் (ஜூலை 21-27)

மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாடு ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதி கிடைக்க பெறுவார்கள் கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும். சொத்துக்கள் வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளையும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. பிரிவினையை நோக்கிச் சென்ற குடும்பங்கள் அருமையாகவும் வாய்ப்பு என்று உண்டு.

கடக ராசி நண்பர்களுக்கு நல்ல நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் தம்பிக்காக சற்று கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டி வரலாம் இருப்பினும் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள் கூட்டுத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கம்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஆன நாள் ஆகும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனையில் ஏற்படும். இவைகளில் வெற்றி கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் வெளிநாடு செல்ல உங்கள் பிரயாணங்கள் வெற்றியடையும்.

சிம்ம ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்?

சிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள் பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும் பெண்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சாதகமான பல தகவல்கள் வந்து சேரும்.

கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள். மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷமும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும் வேலையில் இடமாற்றத்தை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன்னே வந்து நிற்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் எதிர்காலத்தைப் பற்றிய பல புதிய பாதைகள் தென்படும்.

துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை கொடுக்கும். திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும். குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம். படலாம் என்பதால் சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள் புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்

விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பிரயாணத்திற்கு வாய்ப்புண்டு என்பதால் உங்கள் பிரயாணங்களால் வெற்றி அடைவீர்கள் ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் கிடைக்கும் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போக போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் கல்விச் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு. அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி நண்பர்களுக்கு இந்த நாள் நல்லநாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உத்தியோகத்தில் நல்ல நிலைமையை பெறுவார்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோஷமான சந்திப்புகளும் உண்டு. உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நாள் ஆகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். இவைகளால் ஆதாயமும் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும்.

மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது வெளிநாடு செல்வதற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்களும் வாய்ப்புகளும் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் இவைகளில் நல்ல நிகழ்வுகள் இன்று உண்டாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா சம்பந்தப்பட்ட காரியங்களை துவக்குவதற்கு இன்று உகந்த நாளாகும் தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய நாளாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் அரசியல் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

கும்ப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக மகான்களின் தரிசனம் குருமார்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் மாணவர்களின் கல்வி மேம்படும். வெளிநாடுகளில் கல்வி கற்று முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க எதிர்பாராத பண உதவி வந்து சேர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும் தாய்நாடு திரும்ப சிந்தனை கொண்டு இருப்பவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான சூழ்நிலைகளில் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் .மொத்தத்தில் முன்னேற்றமான நாடாக இன்றைய நாள் அமையும்.

மீன ராசி அன்பர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும் வயதானவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் சிறிய அளவில் ஏற்பட்டு விலகும் குழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். ஆயினும் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும் திருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முடிவு எடுப்பதை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும். மற்றபடி மன மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நல்ல நாள்.

]]>
சென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி https://theboss.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf/ Tue, 23 Jul 2019 02:11:40 +0000 http://theboss.in/?p=23112 சென்னை: மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்கம், சென்னை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்வாயில் தண்ணீர்  சுலபமாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு  உத்தரவிட  வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம்  தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தை  போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த ஜூன் 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம்  தெரிவித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஏரிகளை தூர்வாறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?..இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.மழை நீர் வீணாக கடலில்  கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?.. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல செய்துள்ளது.

இந்நிலையில், இன்று மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னையில் பெய்யும் மழை நீர் என்ன ஆகிறது என்று எங்களோடு வந்து ஆய்வு செய்ய  அதிகாரிகள் தயாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிபதி கூறினார். தேங்கிய மழைநீர்  வடிந்து விட்டதை ஆய்வு செய்ய என்னுடன் அதிகாரிகள் வருவார்களா ? என்றும் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது ? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னையில் எத்தனை  நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.

]]>
கழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா?: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு https://theboss.in/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/ Tue, 23 Jul 2019 02:10:32 +0000 http://theboss.in/?p=23110 போபால்: ‘கழிவறையோ, கழிவுநீர் கால்வாய்களையோ சுத்தம் செய்வதற்காக நான் எம்பி ஆகவில்லை’ என்று பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் நாடு  முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். அதன்படி, பாஜ கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், தூய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்  பிரதேச மாநிலம் சாகோர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர்,  ‘‘நான் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக எம்பி ஆகவில்லை. நாடாளுமன்றத்தில் நேர்மையான எம்பியாக செயல்படவே  விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து மேடைக்கு மேடை பேசும் நிலையில், மோடியின் கொள்கை, திட்டத்துக்கு எதிராக பிரக்யாக கருத்து தெரிவித்து இருப்பது மத்திய பிரதேச பாஜவில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து அம்மாநில பாஜ தலைவர்களிடம் கேட்டபோது, ‘பிரக்யா தாக்கூர் கூறியிருப்பது எங்களுக்கு தெரியாது’ என்றனர். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மகாத்மா காந்தி பற்றி அவதூறு பரப்பிவிட்டு, கோட்சேவை  புகழ்பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன வேலை?’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

]]>
மோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம் https://theboss.in/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-50-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1/ Tue, 23 Jul 2019 02:09:20 +0000 http://theboss.in/?p=23108 பிரதமர் மோடி, 2-வது முறையாக, கடந்த மே 30-ந் தேதி பிரதமர் பதவி ஏற்றார். அவரது அரசு பதவிக்கு வந்து 50 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, 50 நாள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிக்கையை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 50 நாட்களில் அனைத்துதரப்பு மக்களுக்கும் எண்ணற்ற நற்காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘அனைவருடனும், அனைவருக்காகவும் வளர்ச்சி’ என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி பதவி ஏற்றார். அவரது செயல்பாடுகளை மக்கள் பார்த்துள்ளனர். வேகம், திறமை ஆகியவற்றை பார்த்துள்ளனர்.

இந்தியாவை முன்னெடுத்துச் செல்லுதல், அண்டை நாடுகளுடன் உறவை முன்னெடுத்துச் செல்லுதல், முதலீடு, ஊழலுக்கு எதிரான போர், சமூக நீதி ஆகியவை 50 நாட்களின் முக்கிய சாதனைகள் ஆகும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 3 மடங்குவரை உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் விவசாய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தால், 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் ஆதிக்கத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுதான், பிரதமர் மோடி எடுத்த முதல் முடிவு. வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம், நடுத்தர வகுப்பினருக்கு வரிச்சலுகை, வீட்டு கடன் வட்டிக்கு சலுகை என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது கனவல்ல, நிஜமாக கூடியது.

மருத்துவ கல்வியை சீர்திருத்தும் நடவடிக்கைகள், ‘போக்சோ’ சட்டத்தை வலுப்படுத்துதல், பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருதல் என சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சாலை, ரெயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டம், ‘ஜல் சக்தி’ அமைச்சகம் அமைத்தது ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

வேகமான வளர்ச்சி என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. சீர்திருத்தங்களின் வேகம், மோடியின் முந்தைய அரசின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. எனவே, முன்பை விட இந்த அரசு மிக உறுதியாக செயல்படும் என்ற உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. சந்திரயான்-2, ககன்யான் என விண்வெளி துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

]]>
வேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் https://theboss.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/ Tue, 23 Jul 2019 02:07:46 +0000 http://theboss.in/?p=23106 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு பழிபோட்டு முடக்கப்பட்டது தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வை குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அது டெங்கு காய்ச்சல் தொற்று போல பரவி பாதிக்கும் என நினைத்து மத்திய, மாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தை கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தம்.

இதில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்களே நன்கு அறிவார்கள். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று, இந்திய துணை கண்டத்தையே தெற்கு நோக்கி திராவிட இயக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதான், சதிகளை முறியடித்து மூலையில்போட்ட நமது சாதனை வரலாறு.

வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? யாமறியோம் பராபரமே என்ற பூஜை தான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றை தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியை கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.

இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றிக்காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.

தி.மு.க. சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் கதிர் ஆனந்த் களம் காண்கிறார். வேலூர் மக்களவை தொகுதிக்கு முழுமையாகவும் அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் கழகத்தின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கின்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, அதிகார பலத்தாலும் துஷ்பிரயோகத்தாலும் வெற்றிபெற்று விடலாம் என்ற நப்பாசையுடன், மோசடி வழிகளை முக்காடு போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். தி.மு.க. மீது மீண்டும் ஏதாவது அவதூறுகளை பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மை பணி. வேலூர் தேர்தல் களத்தில் செயலாற்றும் தி.மு.க. வினர் அனைவரும் அவரவர் பகுதிக்குரிய பொறுப்பாளர்களுடன் இணைந்து நின்று, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குகள் உதயசூரியனுக்கே என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆளுந்தரப்பின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் கபட நாடக பலத்தையும் எதிர்கொள்ள நம்மிடம் இருப்பது, ஆர்வம் மிகுந்த செயல்பலம் தான். கருணாநிதி நம்மை அதற்கேற்றவாறு நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறார்.

37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்டு 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியை பறித்து, கருணாநிதி தங்கத்திருவடியில் காணிக்கையாக்கிடுவீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


]]>
இறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி https://theboss.in/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ Tue, 23 Jul 2019 02:06:10 +0000 http://theboss.in/?p=23104 வேலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை அடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

2. டி.எம். கதிர் ஆனந்த் – தி.மு.க.

3. தீபலட்சுமி- நாம் தமிழர் கட்சி.

4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்- பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

5. வி.சேகர்- ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

6. ச.திவ்யா- தேசிய மக்கள் கழகம்.

7. நரேஷ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி.

8. பேராயர் காட்பிரே நோபுள்- தேசிய மக்கள் சக்தி கட்சி.

9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

10. விஜய் பவுல்ராஜா- ரிபப்ளிக்கன் சேனா.

மேலும் 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

]]>
இந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 https://theboss.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af/ Tue, 23 Jul 2019 02:02:50 +0000 http://theboss.in/?p=23101 நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக ‘சந்திரயான்-1’ என்ற விண் கலத்தை இஸ்ரோ தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக் கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.

தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற் காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.978 கோடியாகும்.

பின்னர் அங்கிருந்து அந்த விண்கலம் சென்னை அருகே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது. இது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி.’ மார்க்-3 ரகத்தில் 14-வது ராக் கெட் ஆகும். இதில் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.53 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் 58 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்கலத்தை நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ‘சந்திரயான்-2’ விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 43.3 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த ராக்கெட்டில் 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர், 1,471 கிலோ எடைகொண்ட லேண்டர், 27 கிலோ எடை கொண்ட ரோவர் உள்பட 3,877 கிலோ எடை கொண்ட ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

புறப்பட்ட சுமார் 16 நிமிடம் 24 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்ததும், ‘சந்திரயான்-2’ விண் கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்-2 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. அதையடுத்து, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘ஈஷா’ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டார். அனைவரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினர். விஞ்ஞானிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர் களை ஆரத்தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளர் அரங்கில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பார்த்து பரவசப்பட்டனர். வானம் நேற்று மேகமூட்டமாக இருந்ததால் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை சில நொடிகள் மட்டுமே காணமுடிந்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

நிலவை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-2 விண்கலம் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் வரும் செப்டம்பர் முதலாவது வாரம் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்யப்படுகிறது.

பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் கருவிகள் ஆய்வு பணிகளை தொடங்கும். நிலவுக்கு செல்லவும் மற்றும் நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை அனுப்புவதுமான சவாலான பணி இதுவாகும்.

சந்திரயான்-2 கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது பொருத்தமில்லாத வானிலை ஏற்பட்டதால் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை இந்தியா எட்டும் திட்டமாக இந்த திட்டம் மாறும்.

லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வுப்பணி சில நாட்களில் முடிந்து விடும். அதே நேரத்தில் ஆர்பிட்டர் ஓராண்டு வரை பணியை தொடரும். ரோவர், சூரியசக்தி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, 500 மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஆய்வு செய்யும். ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

நிலவின் தென்துருவத்தில், கனிமங்கள், ரசாயன கலவை, பவுதிக துகள்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். இதன்மூலம், நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை அறிய முடியும்.

ரோவர் தகவல், படங்கள் மற்றும் தரவை லேண்டருடன் பகிர்ந்து கொள்ளும். அது, இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ளும். 500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் 120 தொழில் நிறுவனங்கள் இந்த பணிக்கு உதவி செய்தன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் பேசியதாவது:-

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். நிலவுக்கான இந்தியாவின் சரித்திர பயணம் தொடங்கும் நாள். சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்ட உயரத்தை விட இன்று 6 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் கூடுதலாக கொண்டு சென்றுள்ளது. நாளை இஸ்ரோ குழுவினர் செய்ய வேண்டிய வேலையை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்றே செய்துள்ளது.

கடந்த 15-ந் தேதி ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 36 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டு ராக்கெட் ஏவும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு கடந்த ஒரு வாரம் தூங்காமல் அனைவரும் வேலை செய்துள்ளோம். முன்பு அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் செயல்பாட்டை விட தற்போது ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 15 சதவீதம் கூடுதல் செயல்பாடுடன் உள்ளது.

மேலும், ஒரே திட்டத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கருவிகளும் நிலவிற்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. கடந்த ஒன்றரை வருடமாக செயற்கைகோள் குழு மிகக்கடினமாக உழைத்து சந்திரயான்-2 வை வடிவமைத்துள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் 15 மிகக்கடினமான கட்டங்களை தாண்டி சந்திரயான்-2 நிலவிற்கு கொண்டுசெல்லப்படும்.

லேண்டர், ரோவர் நிலவில் தரை இறங்கும் கடைசி 15 நிமிடம் திகிலான நேரமாக இருக்கும். இந்திய தேசிய கொடி விண்வெளி துறையில் உயரத்தில் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இமாலய சாதனை

நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரை இறக்கி, ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இடம்பெற உள்ளது.

ஆனால், நிலவின் தென்துருவத்தில் எந்த நாடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது இல்லை. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய உள்ள முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற உள்ளது. இத்தகைய இமாலய சாதனையை ‘இஸ்ரோ’ படைத்துள்ளது.
அடுத்தது, சூரியனுக்கு

சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை ‘இஸ்ரோ’ செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ஆதித்யா-எல்1’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டத்தை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.

“சூரியனை சுற்றி உள்ள ஒளிவட்டம், எப்படி இந்த அளவுக்கு அதிக வெப்பநிலையை அடைகிறது என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது” என்று இஸ்ரோ தனது இணையதளத்தில் இத்திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில், இந்த திட்டம் பற்றி விவரித்தார். “பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியன் இருக்கிறது. பருவநிலை மாறுபாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒளிவட்டம் பற்றி ஆய்வு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

உலகம் எப்போது தோன்றியது?

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமை நிலையத்தில் இறுதிக்கட்ட சோதனை செய்யப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில், சந்திரயான்-1 திட்டத்தை விட பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. 3.8 டன் எடையுள்ள சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

நிலவின் மேற்பரப்பு வரைபடம், தாதுக்கள், வேதியியல் கலவை, நிலவின் மேற்பரப்புக்கு மேலே உள்ள சிதறிய நீர் மூலக்கூறுகள் மற்றும் பாறை வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள ரோவர் வகை வாகனத்தை, இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலவின் தென் துருவத்தை நோக்கமாக கொண்டு அதன் அருகில் முதன் முதலில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாறைகள் உள்ளன. இவற்றை எந்த நாடும் இதுவரை ஆய்வு செய்ததில்லை. இதனை ஆய்வு செய்வதன் மூலம் உலகம் எப்போது தோன்றியது என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். மேலும் கனிம மற்றும் நீர் எதிர்பார்ப்பு சோதனைகளையும் சந்திரயான்-2 விண்கலம் மேற்கொள்ள இருக்கிறது.

பெண்கள் தலைமையில் முதல் மிஷன்

சந்திரயான்-2 விண்கலத்துக்கு திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி எம்.வனிதா மற்றும் பணி இயக்குனராக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த விஞ்ஞானி ரிது கரிதால் ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். 2 பெண்கள் தலைமையில் சந்திரயான்-2 திட்டம் வழிநடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். அவர்கள் தங்கள் சொந்த திறமையால் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளனர்.

குறிப்பாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது துணை நடவடிக்கை இயக்குனராக விஞ்ஞானி ரிது கரிதால் திறமையாக பணியாற்றி வெற்றி தேடி கொடுத்துள்ளார். அதேபோல் விஞ்ஞானி வனிதாவின் சாதனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மற்றும் அணியை கையாளுதலில் திறமையானவர்.

சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2-ன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இதுபற்றி கூறுகையில், திறமையான குணாதிசயம் இவர்களுக்கு உள்ளது. ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், சந்திரயான்-2 என்ற பிரமாண்டமான பணியைக் கையாள இயக்குனர்களாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

13 பேலோடுகள்

சந்திரயான்-2 மொத்தம் 13 பேலோடுகளைச் சுமக்கும். இதில் ஆர்பிட்டரில் எட்டு, லேண்டரில் மூன்று, ரோவரில் இரண்டு உள்ளன. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கியபின் ரோவர் லேண்டரிலிருந்து வெளியேறும் போது ஆர்பிட்டர் தனது பணியைத் தொடரும்.

இது மிகவும் மெதுவான செயல்பாடு ஆகும். அதைத் தொடர்ந்து, ரோவர் நிலவுக்கு நகரும். இது வினாடிக்கு 1 சென்டி மீட்டர் வேகத்தில் நகரும். தொடர்ந்து 500 மீட்டர் தூரம் வரை செல்லும். நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய விஷயம்.

அங்கு வெப்பமானது 156 டிகிரியாகும். இந்த இடங்களில் 10 ஆயிரம் டன் முதல் 100 மில்லியன் டன் வரை மாறுபடும் பனியும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

சந்திரயான்-2-க்கு தமிழகத்தின் பங்கு மகத்தானது

நிலவின் மேற்பரப்பில் ‘அனார்தசைட்’ என்ற ஒரு வகை மண் துகள்கள் இருப்பதாக சந்திரயான்-1 விண்கலத்தின் ஆய்வு மூலம் தெரியவந்தது. தற்போது சந்திரயான்-2 திட்டத்துக்காக தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமத்தில் இருந்து ‘அனார்தசைட்’ மண் துகள்கள் 50 டன் தோண்டி எடுத்து பெரியார் பல்கலைக்கழகம் இஸ்ரோவிடம் வழங்கியது.

இதன் மூலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு சந்திரயான்-2 நிலவின் பரப்பில் பத்திரமாக இறங்குவதையும், லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப்பார்த்து உள்ளனர். அத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் என்ஜின் தயாரிப்புக்கு தேவைப்படும் ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ சுருள்கள் சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.

அத்துடன் இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திரயான்-2 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வனிதா முத்தையா ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்கு தமிழகத்தின் பங்கு மகத்தானது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

]]>
சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு https://theboss.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/ Tue, 23 Jul 2019 02:00:24 +0000 http://theboss.in/?p=23099 சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
இதன்பின் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 5ந்தேதி மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது.  இதன்படி, சென்னையில் கடந்த 6ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்ந்து ரூ.76.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை மாற்றமின்றி ரூ.69.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
]]>
இன்றைய ராசி பலன்கள் (11/07/2019) https://theboss.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11072019/ Mon, 15 Jul 2019 02:12:14 +0000 http://theboss.in/?p=23097 மேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். வாகன வகையில் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள். மன நிம்மதி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

ரிஷபம்: ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். உங்கள் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வது நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும், வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள இளையவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் அணிவகுக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.

மிதுனம்: மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். தன வரவுக்கு வழி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த பணம் வந்து சேரும். சுபச் செலவுகள் கை மீறி செல்லும். சிக்கனத்தை கடைபிடிப்பது சிரமம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள், வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தருவதாக அமையும். அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாளாகும்.

கடகம்: கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பணம் திரும்பப் பெறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றமான ஒரு நாளாக இருப்பதால் ஆராய்ச்சிக் கல்வியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பல முக்கிய முடிவுகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்: சிம்ம ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும், வெற்றி அடையும். பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் நன்மை தருவதாக அமையும். மாணவர்களின் கல்வி மேம்படும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆதாயம் பெறுவார்கள்.

கன்னி: கன்னி ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று நிற்பது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்பி வருவதற்கான மனோநிலைக்கு திரும்புவர். விசா தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் இருந்து தனவரவு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் கிடைக்கப்பெறும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல நிகழ்வுகள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

துலாம்: துலாம் ராசி நண்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் ஆக இருப்பதால் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். இருப்பினும், எட்டாமிடத்தில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பதால் முன்னேற்றமான பல செயல்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும், வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர் போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

விருச்சகம்: விருச்சக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். ஏழாம் இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்து சிவசக்தி யோகத்தை முழுமையாக உங்களுக்கு அளிக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மூத்தவர்களுடன் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும், அவைகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள் இன்றைய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் நன்மையும் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்ததொரு நாளாகும். சந்திரன் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆயினும், இவற்றால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக இருக்கவும். அரசு தொடர்பான காரியங்கள் என்று முடிய வாய்ப்பு உள்ளது. கலைத் துறையிலும் பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகுந்த நாள் ஆகும். தன வரவு உண்டாகும்.

மகரம்: மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். நல்ல நாள் ஆகும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். வெளிநாடு செல்வதற்கு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு சற்று உடல்நிலையில் தொல்லைகள் கொடுத்து சரி செய்யக்கூடிய நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்: மீன ராசி நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க வாய்ப்பு உள்ளது. மீடியா பத்திரிக்கை துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

]]>
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள் https://theboss.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ Mon, 15 Jul 2019 02:08:30 +0000 http://theboss.in/?p=23095 வாஷிங்க்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கசகஸ்தான் நாட்டின், ஷெஸ்கஸ்கான் பகுதியில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த ஆனி மெக்ளைன் , ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மஸை சேர்ந்த கமாண்டர் ஓலெக் கோனென்கோ, கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டேவிட் செயிண்ட் ஜாக்ஸ் ஆகிய 3 பேர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் இன்று பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய சென்றிருந்த இந்தக் குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தில் 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில், அவர்கள் மூவாயிரத்து 264 முறை பூமியை வலம் வந்து, சுமார் 86 லட்சத்து 430 மைல் தூரத்துக்கு பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் மூவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

]]>