தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகன ஆவணங்களைச் சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 07.08.2017 தொடங்கி 11.08.2017 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
கரூர் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, பொதுப்பணித்துறை அமராவதி திட்ட இல்ல வளாகத்தில் நடத்தப்பெற இருக்கும் சிறப்பு முகாமில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதனால்,வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில், தங்கள் வாகனத்தின் நடப்பிலுள்ள வாகனப் பதிவுப் புத்தக விபரம் (Rc Book), வாகன அனுமதிச்சான்று (Permit), வாகன தகுதிச் சான்று (FC),சாலை வரி ரசீது (Road Tax Receift) மற்றும் காப்பீட்டு விபரங்கள் (Insurance Details) ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம்செய்து, இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமுக்கு வர வேண்டும். பதிவேற்றிய மேற்காணும் ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த முகாம், வாகனத் தரவுகளை ஒழுங்குபடுத்த நடைபெறுகிறது. இங்கு வானங்களைக் கொண்டு வர வேண்டாம். முகாமில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையைப் பயன்படுத்தி மணல் ஏற்ற முடியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
For More News www.theboss.in