ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஹைதராபாத்தில் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்திய வரலாற்றில் ஜிஎஸ்டி வரி மிக முக்கியமானது. இது, கடந்த 2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு அரசால் கொண்டுவரப்பட்டது. எனினும், இந்த மசோதாவை ஒருசில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில், பா.ஜ.க அரசு வெற்றிபெற்று கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்கள் அவையிலும் ஜிஎஸ்டி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களில் இந்த மசோதாவை நிறைவேற்றம், அதன் பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் எனப் பல படிகளைத் தாண்டி, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஜிஸ்டி வரியால் பல பொருள்களின் விலை குறையும், சில பொருள்களின் விலை உயரும் என்றும் ஜிஎஸ்டி-யால் இனிமேல் வரி மேல் வரி செலுத்தவேண்டிய சூழ்நிலை உருவாகாது என்றும் கூறப்பட்டது. ஆனால், ’ஜி.எஸ்.டி-யால் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லையென்றாலும், சிரமங்களே அதிகம்’ என்றொரு கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுதொடர்பாகவும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் தற்போதுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஹைதராபாத்தில் இன்று ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வலைதளப்பக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
For More News www.theboss.in