lakshya_3127998h (1)ஜூனியர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான லக் ஷயா ஷென் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

15 வயதான லக் ஷயா ஷென் ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற அனைத்து இந்திய சீனியர் ரேங்கிங் தொடரிலும் பட்டம் வென்று அசத்தியுள்ளார் லக் ஷயா ஷென். தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் லக் ஷயா ஷென் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் சீனியர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடத்துக்கும் சாய்னா நெவால் 9-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். ஆடவர் பிரிவில் சமீபத்தில் சையது மோடி தொடரில் பட்டம் வென்ற சமீர் வர்மா 10 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் காந்த் 2 இடங்கள் பின்தங்கி 21-வது இடத்தில் உள்ளார்.

அஜெய் ஜெயராம் 18-வது இடத்திலும், பிரனோய் 24-வது இடத்திலும், சையது மோடி தொடரில் கால் இறுதி வரை முன்னேறிய சாய் பிரணீத் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 32-வது இடத்திலும் உள்ளனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி இரு இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளது.