இந்த ஆண்டு நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக, அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது
பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் தம் விவசாயப் பணிகளைச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். இதன் ஒருகட்டமாக, சமையலுக்கு அத்தியாவசியமாகப் பயன்படும் தக்காளியை, இந்த ஆண்டு பல விவசாயிகள் பயிரிடவில்லை. மேலும், அனைத்து ஏரி மற்றும் ஆறுகளிலும் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் போதிய விளைச்சல் காணாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதனால், தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, அவற்றின் விலை அதிகரித்துவருகிறது. கடந்த சில நாள்களில் கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்கப்பட்ட தக்காளி, தற்போது ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. தொடர்ந்து தக்காளியின் வரத்தும் விளைச்சலும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை அடுத்தடுத்த நாள்களில் இன்னும் உயரலாம் என காய்கறி விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தக்காளியின் விலை உயர்வால், இல்லத்தரசிகள் பலரும் கவலையடைந்துள்ளனர்.
For More News www.theboss.in