இந்திய பங்குச் சந்தை (சென்செக்ஸ், நிஃப்டி) அமெரிக்காவின் மந்தநிலை குறித்த பெருகிவரும் அச்சங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிந்து 37,786 .98 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 11,352.20 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டியி ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டன.
மும்பை பங்குச் சந்தை19 துறைகளில்16 துறைகள் 1.7 சதவீத சரிவைச் சந்தித்தன. மெட் ரியல்ஸ், பேங்கிங், ரியாலிட்டி இண்டெக்ஸ் பங்குகள் 1 சதவீதம் வரை குறைந்தது. பிஎஸ்இ ஆயில் & கே0.36 சதவீதம் ஸ் முன்னேறியுள்ளது. பி எஸ் இயின் மிட் கேப் இண்டெக்ஸ் 0.9 சதவீதம் சரிந்தது. பிஎஸ் இ ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 0.83 சதவீதம் சரிந்தது.
நிஃப்டி 39 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தையும் 11 நிறுவனங்கள் ஆதாயத்தையும் எதிர்கொண்டன. நிஃப்டியில் ஹிண்டல்கோ அதிக நஷ்டத்தை எதிர்கொண்டது 2.89 சதவீதம் சரிந்து 203.50 ஆக உள்ளது
ஜெஎஸ்டபுள்யூ ஸ்டீல், வேதாந்தா, அல்ட் ரா டெக் சிமிண்ட், கோடாக் மஹிந்திரா பேங்க், டாடா ஸ்டீல், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை நிஃப்டியில் நஷ்டத்தை எதிர்கொண்டன. மறுபுறம். இந்தியன் ஆயில், ஓஎன் ஜிசி, பாரத் பெட் ரோலியம், எண்டிபிசி, எச்பிசிஎல் மற்றும் கோல் இந்தியா ஆகியவை ஆதாயத்தை அடைந்தன.